பிரபல தயாரிப்பாளருடன் நடிகை பாவனா ரகசிய நிச்சயதார்த்தம்.

bhavana engagement

பிரபல தயாரிப்பாளருடன் நடிகை பாவனா ரகசிய நிச்சயதார்த்தம்

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, ‘தீபாவளி’, அசல் போன்ற படங்களில் நடித்தவர் பாவனா. நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி காரில் திருச்சூருக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த 5 பேரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். இதுகுறித்து பாவனா அளித்த புகாரின்பேரில் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாவான விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பாவனாவுக்கும் கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

இந்த நிச்சயதார்த்த விழாவில் இருவீட்டாரை சேர்ந்த நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதியையும் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Comments

comments


Warning: A non-numeric value encountered in /home/cinemau0/public_html/cinemaupdatez/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 308