அப்பா முன்பு காதல் காட்சியில் நடிக்க தயங்கினேன்: ஐஸ்வர்யா

aishwarya-arjun kadhalin Pon Vithiyil

அப்பா முன்பு காதல் காட்சியில் நடிக்க தயங்கினேன்: ஐஸ்வர்யா

அர்ஜுன் தயாரித்து இயக்கும் படம் ‘காதலின் பொன் வீதியில்’. இது முழு நீள காதல் கதையாக தயாராகி வருகிறது. இதில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். இந்த அனுபவம் பற்றி கூறிய அவர்…

“இது ஒரு காதல் கதை. எனக்கும் எனது ஜோடியாக நடிக்கும் நாயகன் சாந்தனுக்கும் ஒரே அளவிலான வேடம்தான். இதில் நான் நிருபராக நடிக்கிறேன். காதலினால் ஏற்படும் பிரச்சினையை நாயகன் நாயகி இருவரும் எதிர்கொள்கிறோம். முதலில் இந்த படத்தில் அப்பா முன்பு காதல் காட்சிகளில் நடிக்க தயக்கமாக இருந்தது. பின்னர் சரியாகிவிட்டது.

படப்பிடிப்பு தளத்தில் எனக்கு டைரக்டராகத்தான் அப்பா செயல்பட்டார். அதனால் முதலில் என்னிடம் இருந்த தயக்கம் பிறகு மாறிவிட்டது. காதல் காட்சிகளில் நாயகனுடன் இயல்பாக நடித்தேன்.

எனது குடும்பத்தில் தாத்தா, அப்பா, அம்மா என்று பலர் நடிகர்களாக இருக்கிறார்கள். எனவே, படப்பிடிப்பு சூழ்நிலை புதிது அல்ல. பழக்கப்பட்ட வி‌ஷயமாகத்தான் இருந்தது” என்றார்.

Comments

comments

SHARE

Warning: A non-numeric value encountered in /home/cinemau0/public_html/cinemaupdatez/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 308