ஹரஹர மகாதேவகி – திரை விமர்சனம்.!

hara hara mahadevaki movie review

ஹரஹர மகாதேவகி – திரை விமர்சனம்.!

தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதிஷ், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ஆர்.கே சுரேஷ், மனோ பாலா மற்றும் பலர் நடிப்பில் அடல்ட் காமெடி படமாக நாளை மறுநாள் ( செப்டெம்பர்-29) திரைக்கு வர உள்ள படம் ஹரஹர மகாதேவகி

வாட்சப் சாமியாரின் டபுள், ட்ரிபிள் மீனிங் வசனங்களை மையமாக கொண்டு 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்கும் விதத்தில் படத்தில் கதை அமைந்துள்ளது. சரி வாங்க இந்த படம் கவுதம் கார்திக்கு எந்த அளவுக்கு கை கொடுத்திருக்குனு பார்க்கலாம்.

hara hara mahadevaki review
ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஊர் முழுவதும் இலவச பொருட்கள் என்ற பெயரில் பெண்களுக்காக மேக்கப் செட் பேக்கை கொடுத்து வருகின்றனர், இந்த பேக்கில் பாம் வைத்து வெடிக்க வைத்து அனுதாப ஓட்டை பெற பிளான் போடுகிறார் எதிர்க்கட்சி அரசியல்வாதியான ரவிமரியா.

 

இதற்காக இரண்டு ஆட்களை கூட்டி வருகிறார் அவரின் அல்லக்கை, அந்த நபர்கள் தான் மொட்டை ராஜேந்திரனும் கருணாகரனும். மேலும் இதே போல ஒரு பேக்கில் கவுதம் கார்த்திக் நிக்கி கல்ராணி கொடுத்த பொருட்களை எடுத்து கொண்டு அவருடனான காதலை பிரேக் அப் செய்ய செல்கிறார்.

அதுமட்டுமல்லால் மற்றொரு பக்கம் பால சரவணனும் அதே மாதிரி பையில் கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக செல்கிறார், பின்னர் மூன்று பைகளும் எப்படி கை மாறுகின்றன, இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் அடல்ட் காமெடி நிறைந்த கதைக்களம்.

hara hara mahadeviki

கவுதம் கார்த்திக் ரங்கூன், இவன் தந்திரம் படத்தை தொடர்ந்து அடல்ட் காமெடி படமான இந்த படத்தில் நடித்துள்ளார், படத்தில் இவருடைய நடிப்பு, சதிஷ் மற்றும் நிக்கில் கல்ராணியுடன் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கின்றன.

நிக்கி கல்ராணி இந்த படத்தில் துணிந்து நடித்துள்ளார், இவருக்கும் கவுதம் கார்த்திக்கும் இடையேயான காம்பினேஷன் அருமையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

மொட்டை ராஜேந்திரன் மற்றும் கருணாகரன் கூட்டணி இந்த படத்திற்கு படு ஜோராக கை கொடுத்துள்ளது, இறுதி வரை இருவரின் காமெடிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது, படத்தில் இருவரும் பல இடங்களில் ரசிகர்களின் கை தட்டல்களை பெறுகின்றனர்.

சதிஷ் வழக்கமாக பல இடங்களில் மொக்கை காமெடி செய்திருந்தாலும் கிளைமாக்ஸில் பட்டய கிளப்பியுள்ளார்.

hara hara mahadevaki review

ஆர்.கே சுரேஷ் இந்த படத்தில் நேர்மையான போலீஸாக நடித்துள்ளார், காணாமல் போன குழந்தையை தேடி பிடிக்க தீவிர முயற்சி செய்கிறார்.

மயில் சாமி ஒரு சில சீன்களில் மட்டுமே வந்தாலும் அவரது காமெடிகள் அனைவரையும் சிரிக்க வைத்து படத்திற்கு அழகு சேர்த்துள்ளார்.

இயக்குனர் சந்தோஷ் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்காக இந்த படத்தை எடுத்துள்ளார், படம் முழுவதும் அதே வாட்சப் சாமியாரின் குரலில் வசனங்களை கொடுத்து இளைஞர்களை ஆரவாரப்படுத்தியுள்ளார், படத்தின் முதல் பாதி மெதுவாக போர் அடிக்கும் விதத்தில் நகர்ந்தாலும் இரண்டாம் பாதி முழுவம் அடல்ட் காமெடிகளால் இளம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் பதிவுகள் பாராட்ட வைக்கும் வகையில் கொடுத்து படத்திற்கு அழகு சேர்த்துள்ளார். பாடல்கள், இசை ஆகியன ரசிக்கும் படியாக அற்புதமாக அமைந்துள்ளன. ஹரஹர மகாதேவகி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

பிளஸ்:

மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் காமெடிகள்,
கிளைமாக்ஸ் சீன்
வாட்சப் சாமியாரின் வசனங்கள்
ஹீரோ ஹீரோயின் காம்பினேஷன்.

மைனஸ்:

சில இடங்களில் சிரிப்பே வராத சதீஷ் காமெடி, குடும்பத்தோட பார்க்க முடியாத படம்.

மொத்தத்தில் ஹரஹர மகாதேவகி அடல்ட் காமெடி நிறைந்த ஜாலியான படம்.

Comments

comments


Warning: A non-numeric value encountered in /home/cinemau0/public_html/cinemaupdatez/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 308