சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல்

sivakarthikeyan velaikaran

சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல்

மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம், சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் சேரி போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் எடுத்து முடித்துவிட்டதால், மீதி காட்சிகளும் படமாக்கப்பட்ட பின்னர், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை மலேசியாவில் 35 நாட்கள் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

sivakarthikeyan velaikaran firstlook poster exclusive

மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை, 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்திக்கு (ஆகஸ்ட் 25) படம் வெளியாக உள்ளது.

Comments

comments


Warning: A non-numeric value encountered in /home/cinemau0/public_html/cinemaupdatez/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 308