விஜய் ரசிகர்களுக்கு திடீர் விருந்து – மேலும் Mersal டீஸர் தேதி உள்ளே

vijay in mersal third look with great information

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். – Mersal Teaser

Mersal Teaser

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

`ஆளப்போறான் தமிழன்’, `நீதானே’, `மெர்சல் அரசன்’ உள்ளிட்ட பாடல்களின், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில், `மாச்சோ’ பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

அத்துடன் `மெர்சல்’ படத்தில் இருந்து டீசர் அல்லது டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Comments

comments


Warning: A non-numeric value encountered in /home/cinemau0/public_html/cinemaupdatez/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 308